பயிர் பாதுகாப்பு :: பீட்ரூட் பயிரைத் தாக்கும் நோய்கள்

நுனி வளைவு வைரஸ்: வைரஸ்

அறிகுறிகள்:

  • பீட்ருட் இலைத் தத்தப் பூச்சிகள் மூலம் இந்த நோய் பரவும்.
  • வெளிப்புற அறிகுறிகள் இலைகள், தண்டுகள், பூக்கள், பழங்கள், வேர்களில் தோன்றும்.
  • பொதுவாக பல்வண்ணத் தேமல் காணப்படாது. ஈனால் பாதிக்கப்பட்ட செடிகள் உருமாறும். சுருளும் முருக்கிக் காணப்படும். சுருண்டு, குட்டை வளர்ச்சி போன்று உருமாறித் தோன்றும்.
  • இலைகள் தடித்து காணப்படும். மகசூல் மற்றும் வேரின் தரத்தைக் குறைக்கும்.
  • சில வைரஸ்கள் உள்ளே மற்றும் கண்ணால் காண முடியாத அறிகுறிகளைத் தோற்றுவிக்கும். இதனால் உணவுக் கடத்தும் குழாய்களின் திசுக்கள் இறந்தும், செல்களின் எண்ணிக்கை மற்றும் அளவுகள் மாறுபட்டும் காணப்படும்.

கட்டுப்பாடு:

  • நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள இரகங்களை பயிரிட வேண்டும்.
  • சுகாதார முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
  • பயிரிடும் காலத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.
  • வரப்புப் பயிர்களை தடுப்பான்களாக பயன்படுத்த வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி, அழிக்க வேண்டும்.
  • மாலத்தியான் (2மிலி/லிட்டர் நீர்) தெளிப்பதால் இலைத் தத்துப் பூச்சியின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.



அறிகுறிகள்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015